திண்டிவனம் : உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு தைலாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மரம் நடும் விழா மற்றும் எய்ட்ஸ் விழிப்புணர்வு உறுதிமொழியேற்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு வட்டார மருத்துவ அதிகாரி ஜெயபிரகாஷ் தலைமை தாங்கினார். மக்கள் நீதி மையத்தின் வானுர் ஒன்றிய செயலாளர் சந்தோஷ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மர கன்றுகளை வழங்கினார்.டாக்டர்கள் அம்பிகா, இந்திரா நேரு, வசந்தகுமாரி, சீனிவாசன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.மருத்துவ ஆலோசகர் தெய்வானை நன்றி கூறினார்.