செஞ்சி : வல்லம் ஒன்றியத்தை சேர்ந்த 29 அங்கன்வாடி மையங்களுக்கு கேஸ் அடுப்பு, குக்கரை எம்.எல்.ஏ.,டாக்டர் மாசிலாமணி வழங்கினார்.
வல்லம் ஒன்றியத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் காஸ் அடுப்பு மற்றும் குக்கர் இல்லாமல் உள்ள 29 அங்கன்வாடி மையங்களுக்கு எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து தலா 8 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பில் காஸ் அடுப்பு, சிலிண்டர், குக்கர் ஆகியவற்றை மயிலம் தொகுதி எம்.எல்.ஏ., டாக்டர் மாசிலாமணி வழங்கினார். பி.டி.ஓ., சம்மந்தம் முன்னிலை வகித்தார். குழந்தைகள் வளர்ச்சி திட்ட ஒன்றிய அலுவலர் ஜெகதீஸ்வரி வரவேற்றார்.
தி.மு.க., வல்லம் ஒன்றிய செயலாளர்கள் வடக்கு அண்ணாதுரை, தெற்கு துரை, பொருளாளர் தமிழரசன், அவைத்தலைவர் வெங்கடேசன், ஒன்றிய பிரதிநிதிகள் இளம்வழதி, பாண்டியராஜன், திருநாவுக்கரசு, ஒன்றிய துணை செயலாளர்கள் கண்ணன், சிவசங்கரன், முன்னாள் கவுன்சிலர் பெருமாள், நிர்வாகிகள் ராஜலிங்கம், ராஜகோபால், செழியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.