திண்டிவனம் : டில்லியில் விவசாயிகள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதை கண்டித்து, மா.கம்யூ., வானூர் வட்டக்குழு சார்பில் கண்ட ஆர்ப்பாட்டம் நடந்தது.
மூன்று வேளாண் சட்ட மசோதாவை திரும்ப பெற டில்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், மத்திய அரசை கண்டித்தும், விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்தும், மா.கம்யூ., வானூர் வட்டக்குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.திருச்சிற்றம்பலம் கூட்ரோடு பஸ் நிறுத்தம் அருகில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வழக்கறிஞர் பாலமுருகன் தலைமை தாங்கினார்.
மாவட்ட செயற்குழு ராமமூர்த்தி, வட்ட செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட செயற்குழு அறிவழகன், மாவட்டக்குழு முருகன், அர்ச்சுணன் மற்றும் வட்டக்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.