விழுப்புரம் : விழுப்புரம் ரெட்கிராஸ் சொசைட்டி சார்பில் உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி, விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
விழுப்புரம் ரெட்கிராஸ் அரங்கத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, ஆர்.டி.ஓ., ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு மாவட்ட திட்ட மேலாளர் ரவிராஜா வரவேற்றார். சுகாதார பணிகள்துணை இயக்குநர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.மருத்துவம் மற்றும் ஊரகப்பணிகள் இணை இயக்குநர் சண்முகக்கனி சிறப்புரையாற்றினார். இதில், எய்ட்ஸ் தொடர்பான விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டது.
அப்போது, குடும்ப நலன் துணை இயக்குநர் மணிமேகலை, தொழுநோய் துணை இயக்குநர் கவிதாராணி, ரெட்கிராஸ் பொருளாளர் விஜயகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு மாவட்ட மேற்பார்வையாளர் பிரேமா நன்றி கூறினார்.