விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி டோல் பிளாசாவில், பா.ம.க., போராட்டம் எதிரொலி காரணமாக முன்னெச்சரிக்கையாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
சென்னை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் எதிரில் நேற்று பா.ம.க., சார்பில் வன்னியர்களுக்கு 20 சதவிகித தனி இடஒதுக்கீடு கோரி போராட்டம் அறிவித்திருந்தனர்.போராட்டத்தில் கலந்து கொள்ள கட்சியினர் சென்ற போது டோல் பிளாசாவில் போலீசார் தடுத்ததால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டும், சென்னையில் ரயில் மீது கல்வீசிய சம்பவங்கள் நடந்தது.
இதையடுத்து போராட்டத்திற்கு சென்றவர்கள் திரும்பும் போது டோல் பிளாசாவில் வன்முறைகள் ஏதும் நடக்காத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய விழுப்புரம் எஸ்.பி., ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டார்.இதன் பேரில் டவுன் டி.எஸ்.பி.,கள் நல்லசிவம், ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் இன்ஸ்பெக்டர் ரத்தினசபாபதி, சப்-இன்ஸ்பெக்டர்கள் மருது, பாலசிங்கம், ராஜாராம் மற்றும் சிறப்பு அதிரடி படை போலீசார் விக்கிரவாண்டி டோல் பிளாசாவில் ,பா.ம.க., வினர் செல்ல தனியாக ஒரு வழியை திறந்து வைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.