விழுப்புரம் : தகராறில் இளம்பெண்ணை தாக்கியவர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
விழுப்புரம் அடுத்த வி.அரியலுாரை சேர்ந்தவர் ஓசைமணி மனைவி தங்கம், 35; கடந்த 25ம் தேதி மழை பெய்தது, இவரது கூரை வீட்டு தண்ணீர் எதிர் வீட்டை சேர்ந்த குமார், வீட்டினுள் சென்றுவிட்டது. இதனால், ஏற்பட்ட தகராறில் தங்கத்தை, குமார் ஆபாசமாக திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.இது குறித்த புகாரின்பேரில், குமார் மீது விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.