விழுப்புரம் : டில்லியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, இந்திய தொழிற்சங்க மையம் (சி.ஐ.டி.யூ.,) சார்பில் விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
டில்லியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், மத்திய அரசை கண்டித்தும், இந்திய தொழிற்சங்க மையம் (சி.ஐ.டி.யூ.,) சார்பில் விழுப்புரம் தலைமை தபால் நிலையம் எதிரே,ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட தலைவர் முத்துக்குமரன் தலைமை தாங்கினார். செயலாளர் மூர்த்தி, துணை தலைவர்கள் குமார், புருஷோத்தமன், அய்யப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அங்கன்வாடி ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் மலர்விழி, டாஸ்மாக் ஊழியர் சங்க செயலாளர் கணபதி, மருந்து விற்பனை பிரதிநிதி சங்க செயலாளர் அருள்ஜோதி, ஆட்டோ தொழிலாளர் சங்க தலைவர் வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.