திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அருகே குடிபோதையில் திருமண மண்டபத்தின் மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்து வாலிபர் இறந்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கொரட்டூர் காலனியை சேர்ந்தவர் ஜெயபால் மகன் பாண்டியன்,25; டிப்ளமோ பட்டதாரியான இவர், சவுண்ட் சர்வீஸ் ஒன்றில் பணிபுரிகிறார். பெரியசெவலை கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு முன் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் லைட் அமைக்கும் பணியில் நேற்று மதியம் 4 :00 மணியளவில் ஈடுபட்டுள்ளார்.
குடிபோதையில் இருந்த பாண்டியன், நிலை தடுமாறி மூன்றாவது மாடியில் இருந்து கீழே விழுந்து, இறந்தார். திருவெண்ணெய்நல்லுார் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பாண்டியனின் உடலை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.