விழுப்புரம் : விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில், சட்டவிரோதமாக குட்கா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் தாலுகா சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் தலைமையிலான போலீசார், நேற்று புதிய பஸ் நிலையத்தில் ரோந்து சென்றனர். அங்கு, விருத்தாசலம் பஸ் நிறுத்தம் அருகேவுள்ள பெட்டி கடை ஒன்றில், அரசால் தடை செய்த குட்கா பொருட்கள், விற்பனை செய்ததைபோலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து, விழுப்புரத்தை சேர்ந்த ரவி மகன் சுதன்,25; என்பவரை போலீசார் கைது செய்து, குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.