வண்டலுார் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 டிச
2020
23:26

சென்னை : வண்டலுார் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையின் இரண்டாம் பகுதி, விரைவில் போக்குவரத்திற்கு திறக்கப்பட உள்ளது.



சென்னையில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், வண்டலுார் - மீஞ்சூர் இடையே, 64 கி.மீ.,க்கு வெளிவட்ட சாலை அமைக்க, அரசு திட்டமிட்டது. அரசு ஒதுக்கீடுவண்டலுாரில், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் துவங்கும் இச்சாலை, சென்னை - திருப்பதி, சென்னை - கோல்கட்டா, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைகளை இணைத்து, திருவொற்றியூர் - பொன்னேரி சாலையில், மீஞ்சூரில் முடியும். சாலை அமைக்கும் பணிகள், 2011ல் துவங்கியது. இதற்கு, 2,160 கோடி ரூபாயை, அரசு ஒதுக்கீடு செய்தது. வண்டலுார் - நெமிலிச்சேரி இடையிலான முதற்பகுதி பணிகள், 2013 ஏப்ரலில் முடிந்த நிலையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால், போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது.



உத்தரவுதொடர்ந்து, நெமிலிச்சேரி - மீஞ்சூர் இடையே, இரண்டாம் கட்ட சாலை அமைக்கும் பணிகள் துவங்கின. நில எடுப்பு வழக்கு உள்ளிட்ட காரணங்களால், இப்பணிகள் தொடர்ந்து தாமதமாகி வந்தன. அடுத்தாண்டு தேர்தல் நடக்கவுள்ள நிலையில், இச்சாலையை பயன்பாட்டிற்கு திறக்க, முதல்வர் இ.பி.எஸ்., உத்தரவிட்டு உள்ளார்.பிரதமர் மோடி தலைமையில் இவ்விழாவை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதையடுத்து, சாலையில் மைய தடுப்புகளுக்கு, கருப்பு, வெள்ளை வண்ணம் அடித்தல், கம்பங்களில் மின்விளக்கு பொருத்துதல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன. இறுதிக்கட்ட பணிகள்நான்கு இடங்களில் சுங்கச்சாவடிகளும், வேகமாக தயாராகி வருகின்றன. இங்கு கட்டப்பட்டு வரும் கட்டடங்களில், இறுதிக்கட்ட பணிகள் நடக்கின்றன. நெடுஞ்சாலைத்துறையின் கீழ் இயங்கும், தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் வாயிலாக, இந்த சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூல் செய்யப்படவுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளும் நடந்து வருகின்றன.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X