சங்கராபுரம் : சங்கராபுரத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
வேளாண் திருத்த சட்டத்தை வாபஸ் பெறக்கோரி சங்கராபுரம் இந்தியன் வங்கி முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, வட்ட தலைவர் பாஸ்கர் தலைமை தாங்கினார். மாநில இணைச் செயலாளர் பாலச்சந்திர போஸ், மாவட்ட தலைவர் பழனி, செயலாளர் ஏழுமலை, துணைச் செயலாளர் சிவக்குமார், உத்திரகோட்டி, அரி, முரளி, ராஜ்குமார், முனுசாமி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.கையில் கரும்பு, பருத்தி, மக்காச்சோள செடிகளுடன் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.வட்ட பொருளாளர் பிரபாகரன் நன்றி கூறினார்.