சூளைமேடு : நமச்சிவாயபுரம் கூவம் ஆற்றின் கரையோரத்தில் வசிக்கும், 100 பள்ளி மாணவர்களுக்கு, சூளைமேடு காவல் நிலைய சிறார் மன்றம் சார்பில், 16 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.
சூளைமேடு காவல் நிலையம் சார்பில், ஏழை மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. சில தினங்களுக்கு முன், திருநங்கையர் வாழ்வாதாரம் மேம்படும் விதமாக, அவர்களுக்கு தையல் இயந்திரம், மடிக்கணினி, சிற்றுண்டி நடத்த தேவையான உபகரணங்கள், தள்ளு வண்டிகள் வழங்கப்பட்டன.தொடர்ந்து, சூளைமேடு காவல் நிலைய சிறார் மன்றம் சார்பில், நமச்சிவாயபுரம் கூவம் ஆற்றின் கரையோரத்தில் வசிக்கும், 100 பள்ளி மாணவர்களுக்கு, 16 வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பை, ஆய்வாளர் ஆனந்த்பாபு வழங்கினார்.காவல் ஆய்வாளரின் இந்த செயலை, உயர் அதிகாரிகள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.