மூங்கில்துறைப்பட்டு : மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள வடபொன்பரப்பி முஸ்குந்தா ஆற்றின் உயர் மட்ட பாலத்தின் தடுப்புச் சுவர் 'தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலியால் சீரமைக்கப்பட்டது.
மூங்கில்துறைப்பட்டு அடுத்த வடபொன்பரப்பியில் உள்ள முஸ்குந்தா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட உயர்மட்ட பாலத்தின் தடுப்புச் சுவர் ஒரு பகுதியில் இடிந்து ஆபத்தான நிலையில் இருந்தது. இதுகுறித்து 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.அதனைத் தொடர்ந்து, தேசிய நெடுஞ்சாலைத் துறையினர், பாலத்தின் தடுப்புச் சுவரை சீரமைத்தனர்.