ரிஷிவந்தியம் : சீர்பனந்தலில் அமைக்கப்பட்டிருந்த மினி குடிநீர் தொட்டி அகற்றப்பட்டது.
ரிஷிவந்தியம் அடுத்த சீர்பனந்தல் மாரியம்மன் கோவில் தெருவில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் அப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக மினி டேங்க் அமைக்கப்பட்டது.இந்த மினி டேங்க்கில் இருந்து வீணாகி வெளியேறும் உபரிநீர் அருகில் உள்ள கால்வாய்க்குச் செல்லும் படி அமைக்கப்படவில்லை. இதனால் நாள்தோறும் வீணாகி வெளியேறும் தண்ணீர், குடியிருப்புக்கு அருகிலேயே தேங்கி நின்று சாக்கடையாக மாறியது.
இது குறித்து சில தினங் களுக்கு முன் 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது.அதன் எதிரொலியாக குடியிருப்பு வாசிகளுக்கு இடையூறாக இருந்த மினி டேங்க் அகற்றப்பட்டது.