சின்னசேலம் : சின்னசேலத்தில் சேலம் மெயின்ரோடு சாலையில், அமைக்கப்பட்ட கழிவுநீர் கால்வாய் நிரம்பி சாலையில் வழிந்தோடுவதால் அப்பகுதி மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.
சின்னசேலம் நகர பகுதியில் உள்ள சேலம் மெயின்ரோடு சாலையில் ஏராளமான குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள் உள்ளன. வருவாய் ஆய்வாளர் அலுவலகம் அருகே சாலையின் ஓரத்தில் உள்ள வடிகால் வாய்க்காலில் ஏற்பட்ட அடைப்பால், பல நாட்களாக கழிவுநீர் தேங்கி சாலையில் வழிந்தோடுகிறது.இதனால், அப்பகுதி மக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும் துர்நாற்றம் வீசுவதாலும், கொசுக்கள் உற்பத்தியாலும் தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது.எனவே, தேங்கி நிற்கும் கழிவு நீரை அப்புறப்படுத்த பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.