சங்கராபுரம் : சங்கராபுரத்தில் அனைத்துஅரசு துறை அலுவலர்களுக்கான புத்தாக்க திட்ட விளக்கக் கூட்டம் நடந்தது.
வட்டார வளர்ச்சி அலுவலர் துரைசாமி தலைமை தாங்கினார். கூட்டுறவு வங்கி தலைவர் பாண்டியன், உழவர் உற்பத்தியாளர் கூட்டமைப்பு ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர். அணித்தலைவர் ஏழுமலை வரவேற்றார்.மாவட்ட செயல் அலுவலர் ராஜேஷ்குமார், செயல் அலுவலர் பழனிசாமி ஆகியோர் திட்டத்தின் நோக்கம் குறித்து விளக்கிப் பேசினர்.கூட்டத்தில், கிராம நிர்வாக அலுவலர்கள், உதவி வேளாண்மை அலுவலர்கள், ஊராட்சி செயலர்கள், வட்டார வங்கி அலுவலர்கள், வாழ்வாதார இயக்க அலுவலர்கள் மற்றும் அரசுதுறை அலுவலர்கள் பங்கேற்றனர்.திட்ட செயலாளர் யாழினி நன்றி கூறினார்.