பி.எம்., கிசானில் முறைகேடாக பணம் பெற்றவர்கள் டிமிக்கி!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 டிச
2020
23:36

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பி.எம்., கிசான் திட்டத்தில் முறைகேடாக பணம் பெற்றவர்களிடமிருந்து வசூல் செய்வதில் அதிகாரிகள்அலட்சியம் காட்டுவதால், முறைகேடாக பணம் பெற்றவர்கள் தொகையினை திருப்பி செலுத்தாமல் டிமிக்கி கொடுத்து வருகின்றனர்.



விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசு அறிமுகப்படுத்திய பி.எம்., கிசான் திட்டத்தில் விவசாயிகள் அல்லாதவர்கள் பலர் பயனடைந்தனர். வேளாண் அதிகாரிகள் தங்களுடைய தனிப்பட்ட லாபத்திற்காக ரகசிய உள்ளீடு நுழைவு சொற்களை வெளியில் விற்றதால், பல இடைத் தரகர்கள் பொதுமக்களின் ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றை மட்டும் இணையதளத்தில் பதிவு செய்து, அதற்காக ஒரு குறிப்பிட்ட தொகையினை மக்களிடம் பெற்றுக் கொண்டனர்.



திட்டத்தில் சேர்ந்த அனைவரின் வங்கி கணக்கிற்கும் பணம் கிடைத்ததால், பொதுமக்கள் வங்கிகள் முன் குவிந்தனர். இது தொடர்பாக எழுந்த புகாரினால் பி.எம்., கிசான் திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு, தகுதியற்ற பயனாளிகளை கண்டறியும் பணி நடந்தது.



வங்கி தரப்பிலும், கிசான் திட்ட இணையதளத்தில் பதிவாகியிருந்த ஆதார் எண் மூலம் கணக்கெடுத்த போது, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் லட்சக்கணக்கானோர் போலி பயனாளிகளாக இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து அவர்கள் பெற்ற பணத்தை வசூல் செய்யும் பணி துவங்கியது. இடைத் தரகர்களும் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.



மேலும், முறைகேடாக பணம் பெற்றவர்களிடமிருந்து பணத்தை வசூல் செய்ய வருவாய், தோட்டக்கலை, வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சிதுறை என 4 துறை சார்ந்த அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். அனைத்து கிராமத்திற்கும் சென்று மக்களிடம் இத்திட்டத்தைப் பற்றி எடுத்துக் கூறி, முறைகேடாக பெற்ற தொகையினை அதே வங்கிக் கணக்கில் திருப்பி செலுத்துமாறு கூறினர்.



தண்டோரா, ஒலிப்பெருக்கி, நோட்டீஸ் ஆகியவை மூலமும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஆரம்பத்தில் அதிகாரிகளின் நடவடிக்கைகளுக்கு பயந்த மக்கள் சிலர், பணத்தை திருப்பிச் செலுத்தினர்.ஒரு சில பகுதிகளில் பண மீட்பு பணியில் ஈடுபட்ட அதிகாரிகளை எதிர்த்து மக்கள் கேள்வி கேட்டதுடன், பணத்தை திருப்பிச் செலுத்த முடியாது என கூறினர். இதனை சமாளிக்க குடும்பத்தில் ஒருவருக்கு 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் பணி அளித்து, ஊதிய தொகையை பிடித்தம் செய்ய திட்டமிடப் பட்டது.



அதிலும் வீட்டில் ஒருவருக்கு மட்டுமே வேலை கொடுக்க முடியும் என்பதால் மற்றவர்களிடம் பணம் வசூல் செய்ய முடியாமல் அதிகாரிகள் திணறினர். இதனால், பணம் வசூல் செய்வதில் அதிகாரிகள் அலட்சியம் காட்டத் துவங்கியதால், மக்கள் பணத்தை செலுத்தாமல் டிமிக்கி கொடுத்து வருகின்றனர். இதன் காரணமாக மாவட்டத்தில் 50 சதவீதத்திற்கும் குறைவாகவே பணம் திரும்ப பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X