கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே சாராயம் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த உலகங்காத்தான் பகுதியில் பாக்கெட்டுகளில் சாராயம் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், சப் இன்ஸ் பெக்டர் மணிகண்டன், பயிற்சி சப் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் மற்றும் போலீசார் சோதனை மேற் கொண்டனர்.அதில், அப்பகுதியில் வீட்டில் பதுக்கி வைத்து சாராயம் விற்ற அதே ஊரைச் சேர்ந்த சரண்ராஜ், 31; என்பவரை கைது செய்து தப்பியோடிய விஜயராஜ், மாரி, தங்கவேல், கண்ணன், ராஜா ஆகியோரை தேடி வருகின்னர்.
இதே போன்று, மற்றொரு இடத்தில் சாராயம் விற்ற ரமேஷ், 28; என்பவரை கைது செய்து, தப்பியோடிய விஜயராஜ், தர்மலிங்கம், தணிகைவேல் ஆகியோரை தேடி வருகின்றனர். இரு இடங்களிலும் 200 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.