மூங்கில்துறைப்பட்டு : மூங்கில்துறைப்பட்டு அடுத்த கடுவனுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 'கற்போம்; எழுதுவோம்' இயக்கம் துவக்க நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமை ஆசிரியை லட்சுமி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் 2020-2021ம் ஆண்டிற்கான முதியோருக்கு கற்கும் திறனை ஏற்படுத்தும் வகையில் தன்னார்வலர் புவனேஸ்வரி மூலம் 20 பேருக்கு இத்திட்டம் துவங்கியது.பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.