நடுவீரப்பட்டு : கடலுார் அடுத்த திருமாணிக்குழியில் பாடல் பெற்ற அம்புசாஷி சமேத வாமனபுரீஸ்வரர் கோவிலின் தல வரலாற்று புத்தகம் வெளியீட்டு விழா நடந்தது.
நிகழ்ச்சிக்கு இலக்கியச்சோலைத் தலைவர் துரையன் தலைமை தாங்கினார்.கோவிலின் செயல் அலுவலர் மதனா புத்தகத்தை வெளியிட்டார். முதல் புத்தகத்தை பாதிரிகுப்பம் ஊராட்சித் தலைவர் சரவணன் பெற்றுக் கொண்டார். புத்தக ஆசிரியர் மீனாட்சி சுந்தரமூர்த்தி ஏற்புரை வழங்கினார்.விழாவில் சக்திவேல், முருகன், சபாநாயகம் மற்றும் ஊர்ப்பிரமுகர்கள் பங்கேற்றனர்.