புவனகிரி : கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பெண் குழந்தைகளை பாது காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் உறுதிமொழியேற்பு மற்றும் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் மகளிர் திட்டம் வட்டார மேலாளர் கீதா வரவேற்றார். பி.டி.ஓ.,க்கள் சுப்பிரமணியன், விமலா முன்னிலை வகித்தனர். கீரப்பாளையம் ஒன்றிய சேர்மன் கனிமொழி தேவதாஸ் படையாண்டவர் பங்கேற்று பேசினார்.பெண் குழந்தைகளை காப்போம், கல்வி கற்பிப் போம் என உறுதிமொழி யேற்றனர். முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர். மாவட்ட ஒருங்கிணைப் பாளர்கள், சுய உதவி குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். மேலாளர் ரமேஷ் நன்றி கூறினார்.