நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சப் இன்ஸ்பெக்டர் பிரசன்னா மற்றும் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். லாட்டரி சீட்டுகள் விற்ற நெல்லிக்குப்பத்தை சேர்ந்த சேகர்,50; என்பவரை கைது செய்து லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.