நெல்லிக்குப்பம் : கடலுார் மாவட்டத்தில் ஏட்டுகளாக பணியாற்றிய 14 பேர் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் களாக பதவி உயர்வு பெற்றனர்.
தமிழகத்தில் போலீஸ் நிலையங்களில் 10 ஆண்டுகள் ஏட்டுகளாக பணி புரிந்தவர் களுக்கு சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு வழங்கப்படும்.கடலுார் மாவட்டத்தில் பணியாற்றிய 14 ஏட்டுகள் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு பெற்றனர். நெல்லிக்குப்பத்தில் பணியாற்றிய ஏட்டு ஞானபிரகாசம் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்றதற்கு இன்ஸ்பெக்டர் வீரமணி, சப் இன்ஸ்பெக்டர்கள் பிரசன்னா, தவசெல்வம் உட்பட போலீசார் பாராட்டு தெரிவித்தனர்.