குறிஞ்சிப்பாடி : குள்ளஞ்சாவடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து திருடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
குள்ளஞ்சாவடி அடுத்த பெரியகாட்டுசாகை, மெயின் ரோட்டை சேர்ந்தவர் பிரவீன்குமார், 37; கடலுாரில் தங்கி ஆசிரியராக வேலை செய்கிறார்.இவரது தாய் கலையரசி பெரியகாட்டு சாகை வீட்டில் தங்கி, சத்துணவு அமைப்பாளராக வேலை செய்கிறார். கடந்த, 29ம் தேதி கலையரசி வீட்டை பூட்டி விட்டு, மகன் வீட்டிற்கு சென்றார்.நேற்று முன்தினம் வீடு திரும்பி வந்த போது, முன்பக்க கதவை மர்ம நபர்கள் உடைத்து, பீரோவில் இருந்த, 4 சவரன் நகைகள், ரூ.7,500 திருடிச் சென்றிருந்தனர்.பிரவீன்குமார் கொடுத்த புகாரின் பேரில் குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.