வேப்பூர் : வேப்பூர் அருகே கார் மோதிய விபத்தில் நெடுஞ்சாலையை கடக்க முயன்றவர் இறந்தார்.
வேப்பூர் அடுத்த அரியநாச்சியை சேர்ந்தவர் அறிவுடைநம்பி, 50; இவர் நேற்று முன்தினம் இரவு பைக்கில் வேப்பூரில் இருந்து திருச்சி - சென்னை சாலையில் அரியநாச்சிக்கு சென்றார். இரவு 8:00 மணியளவில் அரியநாச்சி பஸ் நிறுத்தம் அருகே சாலையை கடக்க முயன்றார். அப்போது, திருச்சியிலிருந்து சென்னை நோக்கி சென்ற கார், பைக் மீது மோதியது. காயமடைந்த அவர் பரிதாபமாக இறந்தார்.வேப்பூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.