குன்னுார்:நீலகிரி மலை ரயில் சோதனை ஓட்டம், நடத்தப்பட்டது.
நீலகிரி மாவட்டம், குன்னுார் -- மேட்டுப்பாளையம் இடையே நீராவி இன்ஜின், குன்னுார் -- ஊட்டி இடையே டீசல் இன்ஜின் மூலம், மலை ரயில் இயக்கப்படுகிறது.கொரோனா பாதிப்பால், மார்ச் மாதம் முதல், மலை ரயில் இயக்கப்படாமல் உள்ளது. அதே நேரத்தில், இன்ஜின்களின் பராமரிப்பு பணி நடந்து வருகிறது.இந்நிலையில், நேற்று, 'நீலகிரி குயின்' இன்ஜின் ரயில், நான்கு பயணியர் பெட்டிகள் மற்றும் ஒரு தளவாட பெட்டி இணைத்து, குன்னுாரில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு சோதனை ஓட்டமாக சென்றது.