பெரம்பலுார்:சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை, 'போக்சோ' சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
பெரம்பலுார் மாவட்டம், நெடுவாசல் கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன், 50. இவர், அப்பகுதியைச் சேர்ந்த, 6 வயது சிறுமியை, சமீபத்தில் பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். சிறுமியின் பெற்றோர் புகார்படி, மருவத்துார் போலீசார், 'போக்சோ' சட்டத்தில், சரவணனை கைது செய்தனர்.
தொழிலாளி
திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த அகரத்தைச் சேர்ந்தவர், கூலித்தொழிலாளி ராமசாமி, 50; நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு, 5 வயது சிறுமி, தெருவில் விளையாடிக் கொண்டிருந்தார்.அச்சிறுமிக்கு, சாக்லெட் வாங்கித் தருவதாக கூறி, மறைவிடத்துக்கு அழைத்துச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதையறிந்த சிறுமியின் பெற்றோர் புகார்படி, வாணியம்பாடி போலீசார், 'போக்சோ' சட்டத்தில், ராமசாமியை கைது செய்தனர். ராமசாமிக்கு, திருமணமாகி, நான்கு பெண் குழந்தைகள் உள்ளனர்.