திருப்பூர்:தி.மு.க., இளைஞரணி செயலாளர் உதயநிதியின், 43வது பிறந்த நாளையொட்டி, திருப்பூர் மத்திய மாவட்ட தி.மு.க., மற்றும் மாநகர இளைஞரணி சார்பில், அன்னதானம் மற்றும் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.திருப்பூர் அரசு மருத்துவமனையில், பிறந்த 10 பெண் குழந்தைக்கு தங்க காசுகள் வழங்கப்பட்டன. மத்திய மாவட்ட பொறுப்பாளர் செல்வராஜ், தொகுதி பொறுப்பாளர்கள் நாகராஜ் (தெற்கு), தினேஷ்குமார் (வடக்கு), மாநகர இளைஞரணி அமைப்பாளர் செந்தில்குமார் மற்றும் கட்சியினர் பங்கேற்றனர்.