சோழர் கால ஜேஷ்டாதேவி சிற்பம் கண்டெடுப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 டிச
2020
01:21

தஞ்சாவூர்:தஞ்சை அருகே, 10ம் நுாற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால ஜேஷ்டாதேவி சிற்பம் கண்டெடுக்கப்பட்டது.



தஞ்சாவூர், பூதலுார் அருகே அடஞ்சூர் கிராமத்தில், அனந்தீஸ்வரர் கோவிலின் திருச்சுற்று வெளிப் பிரகாரத்தில், மண்ணில் பாதியளவு புதைந்த நிலையில், 4 அடி உயரம், 3 அடி அகலம் கொண்ட ஜேஷ்டாதேவியின் புடைப்புச் சிற்பம் அண்மையில் கண்டறியப்பட்டது.



சரஸ்வதி மகால் நுாலகத் தமிழ் பண்டிதர் மணிமாறன் கூறியதாவது: பூதலுார் அருகே கண்டெடுக்கப்பட்ட ஜேஷ்டாதேவி சிற்பத்தின் இருபுறமும், மகன் குளிகன் எனப்படும் மாந்தன், மகள் மாந்தி ஆகிய இருவரின் புடைப்புச் சிற்பங்களும், மேற்புறத்தில் காக்கை, துடைப்பம் போன்ற உருவங்கள் உள்ளன. இது, சோழர் காலத்தில் உருவாக்கப்பட்டது. கி.பி., 7ம் நுாற்றாண்டு முதல், 10ம் நுாற்றாண்டு வரை தமிழகத்திலும், கர்நாடகத்திலும், ஜேஷ்டாதேவியைத் தாய்க் கடவுளாக வணங்கினர்.



திருப்பரங்குன்றம் குடைவரைக் கோவிலில், இத்தெய்வத்திற்கென தனிக் கருவறை அமைந்துள்ளது. கி.பி., 773ம் ஆண்டில் ஜேஷ்டாதேவி உருவத்தையும், கோவிலையும், பாண்டிய மன்னன் மாறன் சடையனின் தளபதியான சாந்தன் கணபதியின் மனைவி நக்கன் கொற்றி என்பவள் நிறுவியதாக கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாண்டியரை அடுத்து பல்லவரும், சோழரும், ஜேஷ்டாதேவியின் உருவங்களை செதுக்கினர்.



முதலாம் ராஜராஜ சோழன் ஜேஷ்டாதேவிக்கென தனிக்கோவில் ஒன்றை, திருச்சி அடுத்த அன்பனுாரில் அமைத்தான். ஜேஷ்டாதேவி என்ற சொல்லுக்கு, 'முதன்மை வணக்கம் பெறத்தக்கவள்' என்று பொருள். மூத்ததேவி என்றழைக்கப்பட்ட பெயர், காலப்போக்கில் மூதேவியாக மாறி போனது.இவ்வாறு அவர் கூறினார்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X