ராமேஸ்வரம்:புரெவி புயலால் ராமேஸ்வரத்திற்கு ரயில் போக்குவரத்தை தென்னக ரயில்வே ரத்து செய்தது.
புரெவி புயல் டிச.,4ல் பாம்பன், கன்னியாகுமரி இடையே கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்தது. புயலால் பாம்பன் ரயில் பாலத்திற்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதால், நேற்று இரவு 8:15 மணிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை செல்லும் சேது எக்ஸ்பிரஸ் ரயிலை பயணிகள் இன்றி பாம்பன் பாலத்தை கடந்து மண்டபம் ரயில்வே ஸ்டேஷனில் நிறுத்தினர். பின் அங்கிருந்து இரவு 8:45 மணிக்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்னை சென்றது.
மறுஉத்தரவு வரும் வரை தினசரி சென்னையில் இருந்து ராமேஸ்வரம் வரும் சேது எக்ஸ்பிரஸ் ரயில் மண்டபத்தில் நிறுத்தப்பட்டு, முன்பதிவு செய்த பயணிகளை பஸ் மூலம் மண்டபம் வரை ஏற்றி, இறக்கிட உள்ளதாக தென்னக ரயில்வே தெரிவித்தது.