ரிஷிவந்தியம்:அலோபதி மருத்துவம் பார்த்த, போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் அடுத்த லாலாபேட்டையில், பொது மக்களுக்கு பட்டா அளிப்பது தொடர்பாக, ஆர்.டி.ஓ., சங்கீதா, சப் - கலெக்டர் ஸ்ரீகாந்த் ஆய்வு செய்தனர். அப்போது, முருகன் என்பவர் வீட்டில் ஆய்வு செய்தபோது, மூதாட்டி ஒருவருக்கு குளுக் கோஸ் செலுத்தப் படுவதை பார்த்து, விசாரித்தனர்.
அதே பகுதியில் மெடிக்கல் நடத்தி வரும், கள்ளக்குறிச்சியை சேர்ந்த இளையராஜா, 43, சிகிச்சை அளிப்பது தெரிந்தது.இது தொடர்பாக விசாரிக்குமாறு, ரிஷிவந்தியம் வட்டார மருத்துவ அலுவலர் ஜெயபாலனிடம் அறிவுறுத்தினர். மருத்துவக் குழுவினர் விசாரணையில், எட்டாம் வகுப்பு படித்துள்ள இளையராஜா, வேறு நபரின் சான்றிதழ் மூலம், ஐந்து ஆண்டுகளாக மெடிக்கல் நடத்தி வருவதும், அலோபதி மருத்துவ சிகிச்சை அளிப்பதும் தெரிந்தது. இதையடுத்து, மெடிக்கல் கடைக்கு, 'சீல்' வைக்கப்பட்டது. இளை ய ராஜாவை கைது செய்த போலீசார், மருத்துவ உபகரணங்களை பறிமுதல் செய்தனர்.