ராமேஸ்வரம்:'புரெவி' புயல் நாளை மறுதினம், பாம்பன் - கன்னியாகுமரி இடையே கரையை கடக்கும் என, வானிலை மையம் தெரிவித்தது.
முன்னெச்சரிக்கையாக, நேற்று இரவு, 8:15 மணிக்கு, ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை செல்லும் சேது எக்ஸ்பிரஸ் ரயிலை, பயணியர் இன்றி, காலி பெட்டிகளுடன் பாம்பன் பாலத்தை கடந்து, மண்டபம் ரயில்வே ஸ்டேஷனில் நிறுத்தினர். அங்கிருந்து இரவு, 8:45 மணிக்கு பயணியரை ஏற்றி, சென்னை சென்றது.
மறு உத்தரவு வரும் வரை, தினசரி சென்னையில் இருந்து ராமேஸ்வரம் வரும் சேது எக்ஸ்பிரஸ் ரயில், மண்டபத்தில் நிறுத்தப்படும்.முன்பதிவு செய்த பயணியரை, பஸ் மூலம் ராமேஸ்வரத்தில் இறக்கி விட, தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.