கோவை:கோவை முன்சீப் கோர்ட் ஊழியர்கள், 42 பேருக்கு, கொரோனா பரிசோதனை செய்யப் பட்டது.
கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், முன்சீப் கோர்ட் ஊழியர்கள் இருவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்த போது, அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இருவரும் இ.எஸ்.ஐ., மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைஅளிக்கப்படுகிறது.
இதனால், முன்சீப் கோர்ட் பில்டிங் முழுவதும் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது. தொடர்ந்து, கோர்ட் ஊழியர்கள், 42 பேருக்கு நீதிமன்ற வளாகத்தில் கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டது. அரசு மருத்துவமனை சிறப்பு மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர்.