கோவை:கோவை - நாகர்கோவில் இடையே, சூப்பர்பாஸ்ட் சிறப்பு ரயில் வரும், 8ம் தேதி முதல் இயக்கப்படுகிறது.கோவையில் இருந்து தினமும் இரவு, 7:30 மணிக்கு புறப்படும் சூப்பர்பாஸ்ட் சிறப்பு ரயில் (02668) மறுநாள் காலை, 5:05க்கு நாகர்கோவில் சென்றடைகிறது. நாகர்கோவிலில் இருந்து தினமும் இரவு, 9:45க்கு புறப்படும் ரயில்(02667) மறுநாள் காலை, 7:15க்கு கோவை வந்தடைகிறது.
கோவையில் இருந்து வரும், 8ம் தேதியும், நாகர்கோவிலில் இருந்து வரும், 9ம் தேதியும் இச்சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.திருப்பூர், ஈரோடு, கரூர், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி உள்ளிட்ட ஸ்டேஷன்களில் நின்று செல்லும் இந்த ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு, இன்று காலை, 8:00 மணிக்கு துவங்குவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.