புதுச்சேரி: அடுக்குமாடி குடியிருப்பில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
சின்னையாபுரம் (வாழைக்குளம்) அடுக்குமாடி குடியிருப்பில் குடிசை மாற்று வாரியம் மூலமாக ரூ.25 லட்சம் செலவில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடந்தது. லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ., சாலை அமைக்கும் பணியை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் குடிசை மாற்று வாரியத்தின் முதன்மை செயல் அலுவலர் லட்சுமணன், பொறியாளர்கள் ரவிச்சந்திரன், செந்தில்நாதன் மற்றும் ஊர் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.