வில்லியனுார் : சேதராப்பட்டு போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.எஸ்.பி., அகன்சியா யாதவ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். சேதராப்பட்டு போலீஸ் ஸ்டேஷனில் குற்றப் புலனாய்வு மற்றும் பதிவேடு பிரிவு சீனியர் எஸ்.எஸ்.பி., அகன்சியா யாதவ் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது ஸ்டேஷன் வளாகத்தில் இருந்த வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை பார்வையிட்டு, அதன் ஆவணங்களை கேட்டறிந்து ஆய்வு செய்தார். மேலும், பொதுமக்கள் புகார் பதிவுகள் மற்றும் மருத்துவமனையிலிருந்து வரும் தகவலை எவ்வாறு பதிவு செய்துள்ளார்கள் என ஒவ்வொரு பதிவேடுகளையும் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து சேதராப்பட்டு எல்லைக்கு உட்பட்ட குற்றவழக்குகள், ரவுடிகள் பட்டியல் மற்றும் புகைப்படங்களை பார்வையிட்டு ரவுடிகளை தினமும் கண்காணிக்க போலீசாருக்கு உத்தரவிட்டார்.பின்னர், போலீசாருக்கு இருசக்கர வாகன வசதிகள் குறித்தும், அதற்கு பெட்ரோல் முறையாக வழங்கப்படுகிறதா என்பதை கேட்டறிந்தார்.
ஆய்வின்போது இன்ஸ்பெக்டர் நாகராஜ், பதிவேடு பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் இருந்தனர். முன்னதாக ஸ்டேஷனுக்கு வருகை தந்த சீனியர் எஸ்.எஸ்.பி.,க்கு சப் - இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.