புதுச்சேரி : மருத்துவக் கல்லுாரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு 50 சதவீத இடங்களை உடனடியாக பெற வேண்டும் என தலைமைச் செயலரிடம் பா.ஜ., நிர்வாகிகள் மனு அளித்தனர்.
தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலர் அஸ்வனிகுமாரை, பா.ஜ., பொதுச் செயலர் ஏம்பலம் செல்வம், நகர மாவட்ட தலைவர் வக்கீல் அசோக்பாபு, சென்டாக் மாணவர்கள் பெற்றோர்கள் நலச் சங்க தலைவர் நாராயணசாமி ஆகியோர் நேற்று மதியம் சந்தித்தனர்.
அப்போது, தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு 50 சதவீத இடங்களை பெற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நடப்பு கல்வியாண்டிலேயே 50 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை மனு அளித்தனர்.