காரைக்கால் : காரைக்கால் வேளாண் அறிவியல் நிலைய தினக்கூலி ஊழியர்கள் 7வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த வலியுறுத்தி நேற்று அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேளாண் அறிவியல் நிலையம் முன் நடந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு சங்க தலைவர் ஸ்டீபன் தலைமை தாங்கினார். அரசு ஊழியர் சம்மேளன கவுரவ தலைவர் ஜெயசிங், தலைவர் சுப்ரமணியன்,பொதுச் செயலர் ஷேக் அலாவுதீன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.போராட்டத்தில், தினக்கூலி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
நிலுவையில் உள்ள 6வது ஊதியக்குழு ஊதியத்தை கடந்த 2016ம் ஆண்டு முதல் முன்தேதியிட்டு வழங்க வேண்டும், பணியின் போது இறந்த ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் தினக்கூலி பணி வழங்க வேண்டும், 7 வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.