பாகூர் : காணாமல் போன மனைவியை கண்டுபிடித்து தரும்படி, மின் துறை ஊழியர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
தவளகுப்பம் அடுத்த நல்லவாடு தெற்கு வீதியை சேர்ந்தவர் குட்டியாண்டி,44; மின் துறையில் ஒயர்மேனாக பணியாற்றி வருகிறார். இவருக்கு அருந்ததி என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். இந்நிலையில், குட்டியாண்டி, ஒரு பெண்ணிடம் பேசி வந்தது குறித்து, அவரது மனைவி அருந்ததி கேட்டுள்ளார். இதனால், கடந்த 29ம் தேதி கணவன் - மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அதில், அருந்ததி கோபித்து கொண்டு வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை.இது குறித்து குட்டியாண்டி அளித்த புகாரின் பேரில் தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து, காணாமல் போன அருந்ததியை தேடிவருகின்றனர்.