விபத்துகள் அதிகரிப்பு
மூலகுளம்-மேட்டுப்பாளையம் சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
- வினோத்குமார்,மூலகுளம்.
விபத்து அபாயம்
புதுச்சேரி ராஜிவ் சிக்னலில் ஹைமாஸ் விளக்கு கடந்த சில நாட்களாக எரியாமல் உள்ளது. இரவு நேரத்தில் வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
- குமரவேல்,புதுச்சேரி.
இருண்டு கிடக்கும் ஆற்று பாலம்
ஆரியப்பாளையம் சங்கராபரணி ஆற்று பாலத்தில் மின் விளக்குகள் எரியாததால், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
- சிவராஜன்,மதகடிப்பட்டு.
தெருவிளக்குகள் எரியவில்லை
ராஜிவ் சிக்னல் மற்றும் எல்லப்பிள்ளைச்சாவடி மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை சந்திப்பிலும் ஹைமாஸ் விளக்கு எரியவில்லை.
- ஜோதி, புதுச்சேரி.
அவ்வை நகர் 2வது குறுக்கு தெருவில், தெரு விளக்குகள் எரியவில்லை. திருட்டு நடக்க வாய்ப்பு உள்ளது.
- சந்திரசேகர், புதுச்சேரி.
லாஸ்பேட்டை ஆனந்தா நகர், ரமணர் வீதியில் தெரு விளக்கு எரியவில்லை.
-சரவணன்,ரமணர் வீதி.