புதுச்சேரி : முத்தியால்பேட்டை சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையம் சார்பில் உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி,விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.
நிகழ்ச்சிக்கு மருத்துவ அதிகாரிகள் தனலட்சுமி, சாந்தி, கீர்த்தனா முன்னிலை வகித்தனர். மருத்துவ அதிகாரி நிர்மல் குமார் தலைமை தாங்கி, பொதுமக்கள் முறையான ஒழுக்க நடைமுறைகளை கடைபிடித்து வாழ வேண்டும்.மேலும்,நோய்த்தொற்று உள்ளவர்களிடம் அரவணைப்பாக இருக்க வேண்டும் என கூறினார்.தொடர்ந்து, மருத்துவமனை ஊழியர்கள் எச்.ஐ.வி நோய் தடுப்பு மற்றும் பாதுகாப்பை குறிக்கும் விதமாக சிவப்பு நிற ரிப்பன் பேட்ஜ் அணிந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.