ராமநாதபுரம் : ராமநாதபுரத்தைச் சேர்ந்த மகளிர் அரசு மானியத்துடன் இருசக்கர வாகனம் வாங்க விண்ணப்பிக்கலாம்.பணிக்கு நீண்ட துாரம் செல்பவர்கள், சுயதொழில்புரிபவர்கள், கிராம வறுமை ஒழிப்பு சங்கம், அங்கன்வாடி, சத்துணவுபணியாளர்கள், ஆதவற்றவர்கள், இளம் விதவைகள், மாற்றுதிறனுடையவர்கள் 35வயதிற்கு மேற்பட்ட திருமணமாகாதவர் உள்ளிட்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.தேர்வு செய்யப்படுவர்களுக்கு ரூ.25ஆயிரம் அல்லது 50 சதவீதம் இதில் எது குறைவோ அது வழங்கப்படும். பயன்பெற விரும்பும் பெண்கள்மாவட்ட கலெக்டர் அலுவலகம், வட்டாரவளர்ச்சி அலுவலகம், நகராட்சி, பேரூராட்சி அலுவலங்களில் விண்ணப்பங்களை பெறலாம்.