திருப்புல்லாணி : திருப்புல்லாணி அருகே அச்சடிப்பிரம்பில் பாலை ஐந்திணைப்பூங்கா 2015 முதல் இயங்கி வருகிறது.
தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் முத்துராகேஷ் கூறியதாவது:ஐந்திணை மரபணுப்பூங்காவில் தற்போது ஆயிரக்கணக்கான செடிகள், மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இங்கு ரோஜா, மல்லிகை, பாதாம், புங்கன், வேம்பு, தென்னை, செம்பருத்தி, கருவேப்பிலை, தர்ப்பூசணி உள்ளிட்ட ஏராளமான மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு, பராமரிக்கப்படுகிறது. மக்களுக்கு உரிய விலையில் விற்பனை செய்யப்படுகிறது.மேலும் விபரங்களுக்கு 94439 59723 என்ற அலைபேசியில் அணுகலாம் என்றார்.