ராமநாதபுரம், டிச.2-- : ராமநாதபுரம் நகராட்சி சார்பில், மழைநீர் அதிகஅளவில் தேங்கும் இடங்களைகண்டறிந்து, அவற்றை உடனுக்குடன் அப்புறப்படுத்தவும், சேதங்களை தவிர்க்க தலா 8 பேர் அடங்கிய நான்கு சிறப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது
.ராமநாதபுரம் நகராட்சி 33 வார்டுகளில் போதிய மழைநீர் வடிகால் வசதியில்லாததால் கனமழைபெய்தால் ரோடுகளில் தண்ணீர் தேங்கி விடுகிறது. டிச.,1 முதல் 5 வரை மாவட்டத்திற்கு கனமழைஎச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஒன்பது இடங்கள் மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.அவ்விடங்களில் மழைநீர் தேங்கவிடாமல் அகற்றவும்,மின்தடை, மரங்கள் முறிவு உள்ளிட்ட சேதங்களை கண்காணித்து மீட்பு பணிகளை மேற்கொள்ள தலா 8 பேர் கொண்ட 4 சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
மக்களை தங்கவைக்க நகராட்சி, அரசு பள்ளிகள் தயார் நிலையில் உள்ளது. 04567--220 445 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என நகராட்சி அதிகாரிகள் கூறினர்.