மதுரை : மதுரையில் திருஞானம் துவக்க பள்ளி பெற்றோர் ஆசிரியர்கழகம் (பி.டி.ஏ.,) சார்பில் கருப்பப்பிள்ளை ஏந்தல் பகுதியில் தினம் ஒரு மரம் நடும் திட்டம் துவக்க விழா தலைவர் இந்துமதி தலைமையில் நடந்தது.
நிர்வாகி சந்தானலட்சுமி முன்னிலை வகித்தார். தலைமையாசிரியர் சரவணன் மரக்கன்று நட்டு துவக்கி வைத்து பேசுகையில் “இந்தாண்டு முழுவதும் மதுரையில் பல்வேறு பகுதிகளில் தினம் ஒரு மரம் நட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காய்கறி தோட்டம் அமைப்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்,” என்றார்.சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் மகாலிங்கம், ஆசிரியர்கள் பாக்கியலட்சுமி, உஷா தேவி, கீதா, பிரேமலதா, சுமதி, சரண்யா, சித்ராதேவி, பெற்றோர் புவனேஷ்வரி, உஷா, செல்வி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.