ராமநாதபுரம் : கடலாடி ஒன்றியஆசிரியர்கள் சார்பாக, அரசு பள்ளியில் படித்து மருத்துவக் கல்லுாரியில் இடம் கிடைத்துள்ள மாணவர்களுக்கு ரூ.1,86,500 உதவித்தொகை வழங்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பாண்டில் 'நீட்' தேர்வில் 234 மாணவர்கள் பங்கேற்றனர். அவர்களில் அரசு பள்ளிகளை சேர்ந்த 21 பேர் நீட் தேர்வு தேர்ச்சிக்கான தகுதி மதிப்பெண்கள் பெற்றனர். இவர்களில் 7.5 சதவீத இடஒதுக்கீடு அடிப்படையில் மருத்துவக்கல்லுாரியில் பயில ஆறு பேருக்கு இடம் கிடைத்துஉள்ளது.இதுபோக ஒருவருக்கு பல் மருத்துவம்,2 பேருக்கு தனியார் மருத்துவ கல்லுாரியில் இடம் கிடைத்துள்ளது. இவர்களில் கட்டணம் செலுத்த முடியாத மாணவர்களின் கல்விக்கு அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மூலம் உதவிட கல்விதுறை அறிவுறுத்தியுள்ளது.
இதனடிப்படையில் கடலாடி ஒன்றியம் அரசு பள்ளி ஆசிரியர்கள் இணைந்து ரூ.1,86,500 உதவித் தொகையை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்திடம் கொடுத்துள்ளனர்.இதுவரை ஆசிரியர்கள், பிற நன்கொடையாளர்கள்மூலம் ரூ.7.50 லட்சம் பெறப்பட்டுள்ளதாக கல்வித் துறை அதிகாரிகள் கூறினர்.