திருமங்கலம் : திருமங்கலம் அருகே கரடிக்கல்லில் இருந்து எய்ம்ஸ் மருத்துவமனை இடம் வழியாக கூத்தியார் குண்டு நான்கு வழிச்சாலை வரை செல்ல ரோடு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ரோட்டில் தற்போது கனரக வாகனங்கள் மற்றும் ஆஸ்டின்பட்டி மருத்துவமனைக்கு வாகனங்கள் சென்று வருகின்றன. கரடிக்கல்லில் இருந்து இந்த ரோட்டிற்கு திரும்பும் பகுதியில்நேற்று மாலை உயர் மின்அழுத்த கம்பி அறுந்து விழுந்தது.அப்பகுதியினர் வாகனங்கள் செல்ல முடியாதபடி கற்களை வைத்து தடை ஏற்படுத்தினர். பின் மின்வாரிய ஊழியர்கள் அறுந்து கிடந்த கம்பியை அகற்றி சீரமைத்தனர்.