மதுரை, : தமிழக போலீஸ் துறையில் கான்ஸ்டபிள் பணிக்குபட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, பொறியியல் படித்தவர்கள்சேர ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மதுரை தற்காலிக போலீஸ் பயிற்சி பள்ளியில் பயிற்சி நிறைவு அணிவகுப்பு நடந்தது. மொத்தம் 527 பேர் பயிற்சி முடித்தனர். இதில் 275 பேர் மதுரைக்கும், 252 பேர் சிவகங்கைக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் 190 பேர் பட்டப்படிப்பு படித்தவர்கள். 27 பேர் பட்டமேற்படிப்பு, 54 பேர் பொறியியல் பட்டம், 56 பேர் தொழிற்கல்வி பட்டம், 43 பேர் டிப்ளமோ பட்டம் பெற்றவர்கள். சிறப்பு விருந்தினர் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் ஏ.டி.ஜி.பி., சைலேஷ்குமார் யாதவ் பேசுகையில், ''போலீஸ் பணியில் இணையும் நீங்கள் உங்களை அர்ப்பணித்துகொள்ள வேண்டும். சட்டம், போலீஸ் விதிகளை உணர்ந்து பணியாற்ற வேண்டும்,'' என்றார்.