மதுரை : மேலுாரில் சாலையோரகடைகளில் பழம், காய்கறி எடை குறைவாக விற்பதாக வந்த புகாரின் பேரில் மதுரை கூடுதல் தொழிலாளர் நலத்துறை கமிஷனர் குமரன், இணை கமிஷனர் சுப்பிரமணியன், உதவி கமிஷனர் மைவிழிச்செல்வி தலைமையில் துணை, உதவி ஆய்வாளர்கள் ஆய்வு செய்து முறையற்ற எடையளவைகளை பறிமுதல் செய்தனர்.
மேஜை தராசு 14, எலக்ட்ரானிக் தராசு 2, இரும்பு எடைக்கற்கள் 54 என மொத்தம் 70 எடையளவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அப்பகுதியில் உள்ள குளிர்பான கடை உரிமையாளர் மீது எல்.எம்.சி.டி.எஸ்., செயலி வழி புகார் பெறப்பட்டது. அவர் சில்லறை விற்பனை விலைக்கு மேல் விற்பது கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.மதுரையில் அரசு நிர்ணயித்த கூலியை விட குறைவாக வழங்கிய 9 நிறுவனங்கள் குறித்து விசாரணை நடத்தி 15 தொழிலாளர்களுக்கு ரூ.2,84,991 பெற்று தரப்பட்டது என உதவி கமிஷனர் மைவிழிச் செல்வி தெரிவித்தார்.