திருவாடானை : ராமநாதபுரம் மாவட்டத்தில் நவ.1 முதல் 30ம் தேதி வரை பயிர்காப்பீட்டிற்கு பிரீமிய தொகை செலுத்தலாம் என்று அறிவிக்கபட்டது.
திருவாடானை தாலுகாவில் விவசாயிகள் ஆர்வமாக பதிவு செய்ய துவங்கினர்.இது குறித்து வேளாண்மை உதவி இயக்குநர் கருப்பையா கூறியதாவது:இத் தாலுகாவில் 55321.64 ஏக்கர் பரப்பளவு நிலங்களுக்கு 17 ஆயிரத்து 856 விவசாயிகள் பயிர் இன்சூரன்ஸ்க்கு பிரீமிய தொகை செலுத்தியுள்ளனர் என்றார்.அஞ்சுகோட்டை விவசாயிகள் கூறியதாவது:சர்வர் பிரச்னை காரணமாக ஆன்லைனில் விண்ணப்பத்தை பதிவேற்ற முடியவில்லை. வி.ஏ.ஓ. அலுவலகங்களில் பட்டா, சிட்டா அடங்கல் உள்ளிட்ட சான்றிதழ் பெறுவதில் தாமதம் ஏற்பட்டது.
இதனால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பதிவு செய்ய முடியாமல் விடுபட்டுள்ளனர். ஆகவே பயிர்காப்பீடு செய்ய தேதியை நீடித்து அரசு உத்தரவிடவேண்டும் என்றனர்.